‘வலது குறைந்தோரும் சமூகத்தில் சிறப்புடன் வாழ வேண்டும்’ என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நிலையமே திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையமாகும். 1984 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி திஹாரிய எனும் ஊரில் வாடகை வீட்டில் 5 மாணவர்களுடனும் ஒரு ஆசிரியையுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம் இன்று 37 வருடங்களை பூர்த்தி செய்து வெற்றிநடை போடுகின்றது.

மர்ஹும் என். ஜிப்;ரி ஹனீபாவினதும் ஏனையோரினதும் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட இப்பாடசாலை இன்று தற்போதைய பணிப்பாளர் சகோதரர் றிஸ்வான் அவர்களின் தலைமையில் 157 மாணவர்களுடனும் 39 ஆசிரியர்களுடனும் 12 சிற்றூழியர்களுடனும் இயங்கிவருவதுடன் இலங்கை அரசின் கல்வியமைச்சிலும் இலங்கை சமூகசேவை திணைக்களத்திலும் அங்கீகாரம் பெற்ற பாடசாலையாக இயங்கிவருவது மகிழ்ச்சிக்குரிய அம்சமாகும்.

‘அங்கவீனம் ஓர் இயலாமையல்ல’ என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இப்பாடசாலையில் செவிப்புலனற்றோர், விழிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர், மெல்லக் கற்போர் என பல்வேறு வகையான அங்கவீன மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

செவிப்புலனற்றோருக்கான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் சைகை மற்றும் ஊரநன முறை மூலம் இடம்பெறுவதோடு இவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் சாதாரண பாடசாலை கலைத்திட்டத்தின் அடிப்படையிலும், விழிப்புலனற்றோருக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் பிரயில் முறையில் இடம்பெறுவதோடு, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மாணவர்களின் திறமைக்கு ஏற்பவும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இன்னும் இம்மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறனுக்கு ஏற்ப செயற்படும் பயிற்சி பெற்ற ஆசிரியர் குழாம் அர்ப்பணிப்புடன் இங்கு செயலாற்றி வருவது முக்கியமான அம்சமாக காணப்படுவதுடன் இவ்வாசிரியர் குழாமின் சிற்பான வழிகாட்டலால் எமது பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்திலும் காலடி பதித்துள்ளமை பெருமைக்குறிய அம்சமாகும்.

இன்னும் கற்றல் கற்பித்தல் விடயங்கள் மற்றுமன்றி தொழிற்பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. இங்கு தொழிற்பயிற்சி பெற்ற பலர் சாதாரண மக்களுக்கு மத்தியில் சரிசமமாக நின்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதோடு ஏனையோருக்கு தொழில் வழங்கக் கூடிய தொழில் நிறுவனங்களை வைத்து நடத்துபவர்களாகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அத்தோடு வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுவதோடு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட, மாகாண போட்டிகளில் பங்கு பற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுவதோடு ஹொங்கொங், கனடா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வலது குறைந்த மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்களை வென்றுள்ளமை மகிழ்ச்சிக்குறிய விடயமாகும்.

இன்னும் வருடாந்த கல்விச் சுற்றுலா, கண்காட்சிகள், தமிழ்தின போட்டிகள், மீலாத் தின போட்டிகள், அறிவுக்களஞ்சியங்கள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகளிலும் எமது மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு சரிசமமாக போட்டியிட்டு சாதனைகள் படைத்துவருவது வியக்கத்தக்க அம்சமாகும்.

இந்த வகையில் எமது இவ்வலதுகுறைந்தோர் பாடசாலை நின்று நீடித்து வியாபித்து கிளைவிட்டு வானலாவிய ரீதியில் 37 வருடங்களாக உயர்ந்து நிற்க உதவி புரிந்து வரும் தனவந்தர்கள் நல்லுள்ளங்கள் மற்றும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையிலும் உதவி புரிந்து வரும் அனைவரினையும் இத்தருனத்தில் ஞாபகப்படுத்துவதுடன் அவர்களின் உதவிகள் இனிவரும் காலங்களிலும் எமது பாடசாலையின் உயர்ச்சிக்கு கைகொடுக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் எதிர்வரும் காலங்களில் இந்நிறுவனம் சிறப்பாக இயங்க அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்கள்
தலைவர் முஹம்மது றிஸ்வான் றாசிக்,
உப தலைவர் முஹம்மது சாபிர்,
செயலாளர் முஹம்மது மபாஸ்,
உப செயலாளர் அதீம் சுபைர்,
பொருளாளர் அல்ஹாஜ் சுபைர்,
உப பொருளாளர் முஹம்மது இஸ்திகார்

ஏனைய அங்கத்தவர்கள்
முஹம்மது சபர்
முஹம்மது றியாஸ்
முஹம்மது றிம்ஸான்
முஹம்மது நுஸ்கி
முஹம்மது ஹுஸ்னி
முஹம்மது அப்லம்

Leave a comment